விழுப்புரம் மகாராஜபுரம் ஜே.ஜே. நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுகிறது. இந்த உடைப்பை சரிசெய்ய நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது அங்குள்ள தெருவில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீரை கடந்துதான் அப்பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், வேலை விஷயமாகவும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புகின்றனர். குட்டைபோல் தேங்கியுள்ள கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்களுக்கு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.