சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

Update: 2022-09-26 12:23 GMT
சின்னசேலம் சந்தை அருகே உள்ள சாலையோரத்தில் கோழிக்கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் கோழிக்கழிவுகள் அழுகி கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்