திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம்-பெரியசெவலை கூட்டுரோட்டில் உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் கடந்த ஒரு மாதங்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்திருப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.