தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-13 10:20 GMT
பண்ருட்டி அருகே கும்பகோணம் செல்லும் சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதிலிருந்து அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் இரவில் கொசு தொல்லையால் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. ஆகவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதுடன் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்