கழிவு நீர் கால்வாயில் அடைப்பு

Update: 2022-09-11 11:30 GMT

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பாலாஜி நகரில் உள்ள மழைநீர் வடிகால் வெகு நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் கால்வாய் நிரம்பி வழிந்து சாலையில் தேங்கி நிற்கிறது. கொசுக்களும் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் குப்பைகளும் அள்ளுவதில்லை. பாலாஜி நகரில் மழைநீர் வடிகால் வாய்க்காலை தூர்வாரவும், குப்பைகளைஅள்ளவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்