விழுப்புரம் மாவட்டம் கோலியனூா் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் மாணவா்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.