ஆலங்குளம் தாலுகா கீழப்பாவூர் பேரூராட்சி சிவகாமிபுரத்தில் இந்து நடுநிலைப்பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள மேலத்தெருவில் வாறுகால் சரியாக தூர்வாரப்படாமல் மண்மேடாகி விட்டது. இதனால் கழிவுநீர் நிரம்பி வாறுகாலுக்கு மேல் உயர்ந்து தெருவில் ஓடுகிறது. இதனை மிதித்து தான் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்கிறார்கள். எனவே, வாறுகாலை தூர்வாருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?