கிருஷ்ணகிரியில் கட்டிகானபள்ளி ஊராட்சி கேம்பிரிட்ஜ் பள்ளி அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக அமைக்காததால் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி இருக்கிறது. மேலும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகி டெங்கு காய்ச்சல் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி செய்து தர வேண்டும்.
-ரவி, கிருஷ்ணகிரி.