பிரம்மதேசம் அருகே தி சிறுவாடி கிராமத்தில் மரக்காணம்-திண்டிவனம் சாலை பஸ் நிலையம் அருகே வடிகால் வாயக்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் பயணிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரில் கழிவுநீரும் கலந்து இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.