கிருஷ்ணகிரி- சேலம் சாலையில் காவேரிப்பட்டணம் பிரிவு பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அதற்காக ஏற்கனவே இருந்த சாலை தோண்டப்பட்டது. அதன்பிறகு அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. எனவே பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த சாலை பணியை உடனே தொடங்க வேண்டும்.