பழனியை அடுத்த பழைய ஆயக்குடி ஊராட்சி 2-வது வார்டில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அதேபோல் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் சாலையில் தேங்குவதை தடுக்க சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.