பழனி காமராஜர் நகரில் பழைய தாராபுரம் சாலை-உடுமலை சாலை சந்திப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் கழிவுநீர் தேங்கிய பகுதியில் பள்ளம் உள்ளதால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அங்கு கழிவுநீர் தேங்குவதையும், சாலையை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.