விளாத்திகுளம் தாலுகா சிவஞானபுரம் கிராமத்தில் சாலையோரத்தில் மழைநீர், சாக்கடை செல்லும் ஓடையை ஆக்கிரமித்து மூடி உள்ளனர். அருகில் சிசு காப்பகம், அரசு ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது. சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.