சேலம் வடக்கு சொர்ணபுரி சத்யநாராயணன் தெரு நுழைவுவாயில் புதிய பஸ் நிலைய சாலை இணைப்பு பகுதியில் பாதாள சாக்கடை சரியாக கட்டப்படாததால் எப்போதும் சாக்கடைநீர் நிரம்பி சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடி செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் கொசுக்கள் தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே பாதாள சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.