செங்கல்பட்டு மாவட்டம், பழமுத்தூர் கிராமத்தின் உள்ள பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சிறிது மழை பெய்தாலே சாலை முழுவதும் மழைநீர் தேங்கிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், இந்த சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் பள்ளத்தில் கால்தவறி விழும் நிலையும் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் சேதமடைந்து உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.