செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் செல்லும் சாலையின் நடுவில் பள்ளம் உள்ளது. இந்த பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. எனவே, இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். சில நேரம் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.