செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற கழிவுநீர் கால்வாய் பணிகளால் அனைத்து தெருக்களும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குண்டும், குழியுமாய் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.