திருவெண்ணெய்நல்லூர் அருகே கருவேப்பிலைபாளையம் மெயின்ரோட்டில் இருந்து கிழக்குத்தெருவிற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே சாலையில் நடந்து செல்லவே பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைத்து தர பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.