சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?

Update: 2024-03-17 13:04 GMT

சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?

உடுமலையில் தாராபுரம் ரோடு பெரிய கோட்டை ஊராட்சி அய்யலூர் மீனாட்சி நகர் செல்லும் பாதையில் சாலை குறுகலாக உள்ளன. அப்பாதையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாதசாரிகள், இருசக்கர, 4 சக்கர வாகனங்கள், பள்ளி பஸ்கள்அதிகமாக சென்று வருகிறது. இந்த பகுதியில் 1000 குடியிருப்புகள் உள்ளன.இந்த பாதையில் இருந்து தாராபுரம் ரோடு வருவது என்றால் இந்த சாலை வழியாகத்தான் சென்று வர வேண்டி உள்ளது. குறுகலான சாலையை விரிவாக்கம் செய்தால் எதிரே வரும் வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராமதாஸ்,உடுமலை

98787 83638

மேலும் செய்திகள்