சாலை

Update: 2022-09-25 11:34 GMT

ஆபத்தான முறையில் மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கேபிள்கள் அகற்றப்படுமா

மார்தாண்டம்-தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் அழகியமண்டம் பஸ் நிறுத்தத்தில் ஒரு பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த நிழலகத்தின் முன்பக்கம் ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் வீடுகளில் தொலைக்காட்சி இணைப்பு வழங்கும் கேபிள்கள் அதிக அளவில் கட்டி தொங்க விடப்பட்டுள்ளன. இதனால் இந்த நிழலத்தில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் வேகமாக ஓடி பஸ்சில் ஏறும் பயணிகள் இந்த கேபிள்களில் சிக்கி கீழே விழும் நிலையும் உள்ளது. தமிழத்தில் மின் கம்பங்களை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில் விதிகளுக்குப் புறம்பாக இந்த மின் கம்பத்தில் கேபிள்கள் கட்டி வைக்கப்ப்டடுள்ளன. எனவே பயணிகளின் நலன் கருது இந்த கேபிள்களை உடனே அகற்ற மின்சார வாரியம் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது