பரமக்குடி உழவர் சந்தை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும் வாகனஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.