நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை வழியாக திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.ஆர்.சீமோன், நித்திரவிளை.