கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் -பரமத்தி வேலூர் இடையே காவிரி ஆற்றில் குறுக்கே கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன .பாலம் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆனதால் அதை ஒட்டி புதிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பழைய பாலத்தின் வழியாக மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால் பாலத்தில் நடுபகுதியில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதன் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.