சிதம்பரம்-சீர்காழி சாலையில் உள்ள அம்மாபேட்டை வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் இந்த சாலையை பயன்படுத்திய மக்கள் புறவழி சாலை வழியாகவும், அண்ணாமலை நகர் வழியாகவும் பெரும் சிரமங்களுக்கு இடையே சுற்றி சிதம்பரம், சீர்காழி மார்க்கமாக சென்று வருகின்றனர். ஆகவே பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.