சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கொடிப்பள்ளம் சாலையில் உள்ள பாலம் பள்ளம் ஏற்பட்டு பழுதடைந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் கட்டிய பாலம் அது. இதனால் அங்கு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல அந்தப் பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.