விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டியில் இருந்து மாவூத்து அருணகிரிநாதர் கோவில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே புதிய சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.