ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே சேதுபதிநகர் 3வது பிரதான சாலையில் இருந்து மேலக்கோட்டை இ.சி.ஆர்.வரை உள்ள சாலை சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து பிரதான மிக்க இந்த சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் வாகனஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.