விருதுநகர் மாவட்டம் சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள அண்ணா சிலை அருகில் தாழ்வான பகுதியில் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி தண்ணீரில் விழுகிறார்கள். இதை தவிர்க்க இந்த பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் எடுக்க வேண்டும்.