ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் பலகோடி ரூபாய் நிதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் துறைமுகம் செல்லும் பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பாதையானது தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த பாதையை பயன்படுத்த முடியாமல் இப்பகுதி மீனவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த துறைமுக பாதையை சீரமைக்க வேண்டும்.