விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் ஊராட்சி பஸ் நிலையம் முன்பு தற்போது பெய்துவரும் மழையில் மழைநீரானது குளம் போல தேங்கியுள்ளது. இதனால் இந்த பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடிவதில்லை. எனவே அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைத்து மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டும்.
அழகுசுந்தரராஜ், அம்மன்கோவில்பட்டி.