மேம்பால பணி முடிவடையுமா?

Update: 2022-07-27 14:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகில் கீழக்கரை செல்லும் சாலையின் இடைபட்ட பகுதியில் ரெயில்வே மேம்பால பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்த பணி முடிவடையாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த பாலம் திறக்கப்படுவதால் இச்சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க முடியும். எனவே சாலை பணியை விரைந்து முடித்து மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்