ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், ராமர் தீர்த்தம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்வதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இப்பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் அதிக வேகத்தில் செல்லும் வாகனஓட்டிகள் சாலையில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காதவாறு சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.