பொதுமக்கள் அவதி

Update: 2022-07-24 12:15 GMT

விருதுநகர் மாவட்டம் மருதநத்தம் ஊராட்சி மூ. ராமலிங்கபுரம் பகுதியில் குடிநீர் இணைப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடப்பதற்கு மிகவும் அவதியடைகின்றனர். மேலும் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உருவாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள குடிநீர் இணைப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்