குண்டும், குழியுமான மண்சாலை

Update: 2023-03-22 06:03 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளியில் அரசு உயர் நிலைப்பள்ளி  அமைந்துள்ளது. இந்தப்பள்ளியில் சுமார் 450 மாணவர்கள்  படிக்கின்றனர். அந்தப்பள்ளிக்கு செல்லும் சாலையானது மண் சாலை ஆகும். இதனால் மழை நேரத்தில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே இந்த மண் சாலையை காங்கிரீட் அல்லது தார்சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது