விபத்ைத ஏற்படுத்தும் சாலை

Update: 2022-07-20 13:17 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் எஸ்.ராமசந்திராபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமெண்டு சாலை போடப்பட்டது. இந்தநிலையில் இந்த சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சாலையில் வாகனங்களை இயக்க முடியமால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்