சாலையை ஆக்கிரமித்து கடைகள்

Update: 2023-02-19 09:29 GMT

கோவை தாமஸ் வீதி தியாகி குமரன் சந்திப்பில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் திரும்பி செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அங்கு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்