அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் பஸ் நிலையத்தில் இருந்து புறவழி இணைப்பு சாலை வரை 1 கிலோ மீட்டர் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு உள்ளது. எதிரெதிரே வாகனங்கள் சந்தித்துக் கொள்ளும்போது ஒதுங்கி செல்வதற்கு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகலப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.