விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியம் கட்டாலங்குளம்-முனியாண்டி நகர் செல்லும் சாலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் தார்ச்சாலை போடப்பட்டது. இந்நிலையில் இந்த சாலையானது பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் போடப்பட்ட ஜல்லிகற்களானது பெயர்ந்து வெளியே தெரிகிறது. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.