சிதம்பரம் அருகே சின்னசெட்டி தெருவில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் சாலையை சீரமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தொிவித்தனர்.