அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி-முத்துசேர்வாமடம் செல்லும் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த சாலையில் இருந்து பள்ளியின் நுழைவு வாயில் வரை தார்சாலை அமைக்க வேண்டும் என்றும், மழை காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளதால் உடனடியாக இந்த சாலையை தார் சாலையாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.