சென்னை அண்ணாசாலை சிக்னல் அருகே உள்ள பிரபல தனியார் வணிக வளாகம் நடைபாதையும், எத்திராஜ் சாலையில் கூவம் ஆறு மேம்பாலம் நடைபாதையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நடைபாதையில் கட்டுமான பொருட்கள் குவிந்தும், வயர்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால் மக்கள் சாலையின் ஓரமாக வாகனங்களுக்கு அருகே நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடைபாதையை சரி செய்வார்களா?