அரியலூர் மின் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை சீரமைப்பதற்காக தோண்டப்பட்டது. இந்த நிலையில் சாலை அமைக்கப்படாமல் அப்படியே பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.