கால்நடைகளால் விபத்து அபாயம்

Update: 2022-09-28 13:52 GMT
கடலூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் சிதம்பரம்-சீர்காழி சாலையின் நடுவே மாடுகள் அதிக அளவில் படுத்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, மாட்டின் உாிமையாளர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்