புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம் வன்னியம்பட்டி ஊராட்சி வடக்குப்பட்டி ஆர்ச் முதல் கூத்தம்பட்டி இணைப்பு சாலை வரை தார் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட தார் சாலை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பெரியவர்கள் நிலைத்தடுமாறி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.