முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது கிராமத்தில் சுமார் 150 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலச்சிறுபோது கிராமத்திலிருந்து சிக்கல் மெயின் ரோடு சந்திப்பு சாலை சேத மடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரியிடம் தெரிவிக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.