புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு -ஆவணம் கைகாட்டி செல்லும் நெடுஞ்சாலை பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் புதர் போல மண்டி கிடந்து வரும் செடிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் புதர் போல காட்சியளிக்கும் செடி-கொடிகளால் கொடிய விஷ சந்துக்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பாத சாரிகள் பாதிப்படைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.