சிதம்பரம் விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெரு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அந்த பள்ளத்தை அதிகாரிகள் சரி செய்யவில்லை. ஆகவே சாலை பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.