அரியலூர் செல்லும் முதன்மை சாலையில் அமைந்துள்ளது கீழபழுவூர். இங்கு தனியார் சிமெண்டு தொழிற்சாலைக்கு வடக்கு பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளது. இதற்கு அடுத்ததாக புதிய போலீஸ் நிலையம் ஒன்று சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இதனையொட்டி சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் இயங்கி வருகிறது. மேற்படி அனைத்து அலுவலகம் செல்லும் ஒரே நுழைவாயில் பகுதியில் தஞ்சை மற்றும் திருச்சி-அரியலூர் செல்லும் அனைத்து கனரக மற்றும் இதர கனரக வாகனங்களும் அதிவேகத்தில் செல்கிறது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல ஒரு வித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையை கடக்க முயல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.