சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கிளை அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பாலம் கட்டுமான பணி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. இதன்அருகே மாற்றுச்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்வதால் இந்த மாற்று சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆகையால் பாலம் கட்டுமான பணி முடியும் வரை இப்பகுதியில் மாற்று சாலை தரமான தார்சாலையாக அமைக்க வேண்டுகிறோம்.