அரக்கோணம் பஜார் தெருவில் உப்புக்குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவுடன் குளத்தைத் தூர்வாரி புதுப்பித்தனர். தற்போது இந்தக் குளம் மழைநீருடன் கழிவுநீர் கலந்து பூங்கா இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மூழ்கி செடி, கொடிகள் வளர்த்து மாசடைந்துள்ளது. இந்தக் குளத்தைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அரக்கோணம்.